இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்

தினமலர்  தினமலர்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்

லண்டன்: கோவிட் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இப்போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ல் நடக்கிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கையில், ‛இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் அணியின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆல்-ரவுண்டர் அஸ்வின் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி சமீபத்தில் மாலத்தீவு சென்று விட்டு திரும்பியபோது கோவிட் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

லண்டன்: கோவிட் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை