ஏழுமலையானுக்கு செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் மாதம் 16,17ல் ஏலம்; திருப்பதி தேவஸ்தானம் தகவல்

தினகரன்  தினகரன்
ஏழுமலையானுக்கு செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் மாதம் 16,17ல் ஏலம்; திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16,17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16, 17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala.org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை