கடவுளுக்கே பாடமெடுப்பார் பிரதமர் குறித்து ராகுல் கிண்டல்

தினமலர்  தினமலர்
கடவுளுக்கே பாடமெடுப்பார் பிரதமர் குறித்து ராகுல் கிண்டல்



சான்டா கிளாரா, ''தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று ஒரு கும்பல் இந்தியாவில் அலைகிறது. இதில், பிரதமர் மோடி ஒரு தினுசானவர். இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளுக்கே பாடம் எடுப்பார்,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆறு நாட்கள் பயணம் மேற்கொண்டுஉள்ளார்.

கலிபோர்னியா மாகாணம் சான்டா கிளாராவில், காங்கிரசின் வெளிநாட்டு அமைப்பின் அமெரிக்க கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது:

இந்த உலகம் மிகப் பெரியது மற்றும் சிக்கலானது. அதை முழுதும் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஆனால், இந்த உலகத்தில் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று ஒரு கும்பல் இந்தியாவில் அலைகிறது. இது ஒரு வியாதி. அதில், பிரதமர் மோடி ஒரு தினுசானவர்.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாற்று பாடம் எடுப்பார். விஞ்ஞானிகளுக்கு அறிவியல் கற்றுத் தருவார். ராணுவத்தினருக்கு போர் முறைகள் கற்றுத் தருவார்.

ஒருவேளை கடவுளுடன் அமர்ந்து பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே பாடம் எடுப்பார்.

தான் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்து புதிய தகவல்கள் உள்ளதை கேட்டு கடவுளே குழப்பம் அடைந்துவிடுவார்.

கடவுளைவிட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைப்பவர்கள் இவர்கள். அற்பத்தனமான கருத்துக்களின் உச்சத்தில் உள்ள இவர்கள், மற்றவர்களின் பேச்சுக்களை கேட்பதற்கு எப்போதும் தயாராக இருக்க மாட்டார்கள்.

வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்புணர்வு பரப்பப்படுவது உள்ளிட்டவை குறித்து பேச மாட்டார்கள். ஆனால், செங்கோலை பார்லிமென்டில் வைப்பர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல் பேச்சின்போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இடையூறு செய்ய முயன்றனர். ஆனால், பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.

ராகுலின் பேச்சு குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, புதுடில்லியில் நேற்று கூறியதாவது:வழக்கம்போல் வெளிநாட்டுக்கு சென்று நம் பிரதமரையும், நம் நாட்டையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் பேசியுள்ளார்.இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றுமே தெரியாத ஒருவர், அனைத்து விஷயத்திலும் நிபுணராகியுள்ளதாக கருதிக் கொள்கிறார். தன் குடும்பத்தை தாண்டி எதுவும் தெரியாதவர், நம் நாட்டின் வரலாறு குறித்து பேசுகிறார்.உருளைக்கிழங்கில் இருந்து தங்கம் தயாரிக்கலாம் என்று கூறுபவர், அறிவியல் குறித்தும், ராணுவம் குறித்தும் பேசுகிறார். இந்த போலி காந்திக்கு, நம் நாட்டின் கலாசாரம் குறித்து தெரியாது. வெளிநாடுகளில் நம் நாட்டை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது இவருடைய வாடிக்கை. ஆனால், ஒவ்வொரு இந்தியரும், நம் நாட்டின் வரலாறு, கலாசாரம் குறித்து பெருமைப்படுகின்றனர்; நம் நாட்டை பாதுகாக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



சான்டா கிளாரா, ''தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று ஒரு கும்பல் இந்தியாவில் அலைகிறது. இதில், பிரதமர் மோடி ஒரு தினுசானவர். இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளுக்கே

மூலக்கதை