தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை சரிவு; 9.11 லட்சம் பெயர்கள் நீக்கம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜன., 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வந்தது. தற்போது ஜன., 1; ஏப்., 1; ஜூலை 1; அக்., 1 ஆகிய நாட்களை, தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, தொடர்ந்து இளைஞர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை, தற்போது செயல்பாட்டில் உள்ளது. எனவே, கடந்த ஏப்., 1ல் 18 வயது நிரம்பியவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில், படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம்.மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, 'Voter Helpline' என்ற 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்து, அதன் வழியாக விண்ணப்பிக்கலாம். புகைப்படம் இல்லாத வாக்காளர் பட்டியல் நகலை, வாக்காளர் பதிவு அலுவலரிடம், ஒரு சட்டசபை தொகுதிக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 1950, 1800 42521950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.***
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் ஜன.,




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
