பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் ஜூன்8 வரை நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் ஜூன்8 வரை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மாஜி பிரதமர் இம்ரான் கானின் ஜாமின் வரும் ஜூன்8ம் தேதி வரை நீட்டித்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இம்ரானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில் இன்று(மே 23) மீண்டும் வழக்கு விசாரணையில் இம்ரான் கானுக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான 8 வழக்குகளிலும் வருகிற ஜூன் 8 வரை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மாஜி பிரதமர் இம்ரான் கானின் ஜாமின் வரும் ஜூன்8ம் தேதி வரை நீட்டித்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.nsimg3328424nsimgபாகிஸ்தான் பிரதமர்

மூலக்கதை