3 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறும் சுற்றுலா தலங்கள்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான மிதக்கும் நகருக்கு மக்கள் வருகை
பெய்ஜிங்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா தொற்றால் முடங்கிய சுற்றுலா தளங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகருக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். திரும்பும் திசை எங்கும் பூத்து குலுங்கும் துலுக் மலர்கள், பழமை மாறாத வீதிகள். மேலும், பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்காக்கள் என மனதை மயக்கும் ஹூசைன் நகரில் கட்டிடங்களுக்கு நடுவே பாயும் யாங்சே நதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சவாரி செய்து குடுபத்துடன் இளைப்பாறும் மக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கலைநயமிக்க பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நாள் ஒன்றுக்கு 30,000 பேர் இந்த நகருக்கு இந்த நகருக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 1,50,000 பேர் வந்து சென்றதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
