கேரளா மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: 3 பேர் உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சௌபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.மர்ம நபர் தீவைத்து எரித்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயில் கோழிக்கோடு அருகே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மர்மநபர் ஒருவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகளின் மீது திடீரென பெட்ரோல் ஊற்றிய பின் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடி உள்ளதாக பயணிகள் கூறி உள்ளனர்.தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொது மக்கள் தீ காயம் அடைந்த பயணிகளை 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மறைவான மர்ம நபரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ரயில் தண்டவாளத்தில் இருந்து 3 சடலங்கள் மீட்பு. ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் மீட்பு. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். தீ வைத்த நபர் தப்பி செல்லும் CCTV காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் ரயிலுக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரின் CCTV காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். தப்பி ஓடிய மர்ம நபர் பிடிபட்டால் மட்டுமே இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்னவென்று தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் விரைவு ரயிலில் பெட்ரோல் உடன் மர்ம நபர் புகுந்து தீ விபத்து ஏற்படுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்புயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
