இந்தியாவில் மெல்ல மெல்ல குறைய கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் 2 நாட்கள் 3 அயிரத்துக்கும் மேல் பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,995 ஆக குறைந்தது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வந்தது. சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,208ல் இருந்து 16,354 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 1,390 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1840 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக உள்ளது. குணமடைபவர்களின் விகிதம் 98.77%ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.19%ஆகவும் உள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 09,981 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 220,66,09,015ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000ஆக இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து கீழ் பதிவாகியுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
