இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

தினமலர்  தினமலர்
இல்லத்தரசிகளுக்கு ஊதியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த, முதல் இந்திய கட்சி, மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம், தமிழக குடும்ப தலைவியரின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக, முதல்வரை பாராட்டுகிறேன்.

டவுட் தனபாலு: இதே திட்டத்தை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில சொன்னப்ப, 'சொந்தமா யோசிக்க கூட துப்பில்லாம, எங்க திட்டத்தை காப்பி அடிக்கிறாங்க'ன்னு பாய்ந்து பிராண்டுனீங்க... இப்ப, வரவேற்பு பத்திரம் வாசிக்கிறீங்களே... கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்வதில் நல்லாவே தேறிட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: உ.பி.,யில் உள்ள பெண் கைவினைஞர்களில், 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பிரதமரின் திட்டத்தின் கீழ், அவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகள் உள்ளன. இதனால், 'உழைக்கும் பணத்தை சேமிக்க முடிகிறது. எங்கள் பணத்தை நாங்களே எடுத்து செலவு செய்ய முடிகிறது' என்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், சுதந்திரமாக இருக்க முடிகிறது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

டவுட் தனபாலு: உ.பி.,யில் முஸ்லிம் சமுதாய மக்களை, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தன... பா.ஜ., அரசு தான், அவர்களது முன்னேற்றத்துக்கு பாதை அமைச்சு கொடுத்திருக்கு... அதனால் தான், அங்க மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைஞ்சிருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த, முதல் இந்திய கட்சி, மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம், தமிழக குடும்ப தலைவியரின்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை