வெலிங்டன் டெஸ்ட் மழையால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
வெலிங்டன் டெஸ்ட் மழையால் பாதிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையே வெலிங்டனில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கனமழை காரணமாக 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. பேசின் ரிசர்வ் மைதானத்தில்நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. கனமழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதமானது. உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய ஆட்டமும், போதிய வெளிச்சம் இல்லாதல் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. முதல் நாளில் 48 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்துள்ளது. டாம் லாதம் 21, டிவோன் கான்வே 78 ரன் (108 பந்து, 13 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 26 ரன், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை