பெருவில் லிமா நகரம் வெள்ளத்தால் சின்னாபின்னம் ஆனது: ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு

தினகரன்  தினகரன்
பெருவில் லிமா நகரம் வெள்ளத்தால் சின்னாபின்னம் ஆனது: ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு

பெரு: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் யாக்கு புயலால் பெய்து வரும் கனமழையால் லிமா என்ற நகரமே சின்னாபின்னமாகி உள்ளது. அமேசான் மலைக்காடுகளுக்கு அருகில் அமந்துள்ள பெருவில் கடந்த மாத மத்தியில் தாக்கிய யாக்கு புயலால் அங்கு தொடர்ந்து தற்போதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. லிமா நகரின் ஜிமார்க்கா என்று இடத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை ஒருவர் விரைந்து சென்று உயிருடன் காப்பாற்றிய வீடியோ வெளியானது. லிமாவில் உள்ள ஆறு ஒன்றில் 3 மாடி கட்டிடம் ஒன்று அஸ்திவாரத்துடன் இடிந்து ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. கடந்த 3 வாரங்களில் பெருவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 60-வதை தாண்டி உள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ள நிலையில் ராணுவத்தினர் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை