நேபாளத்தில் அரசியல் குழப்பம் அமைச்சர்கள் திடீர் ராஜினாமா

தினமலர்  தினமலர்
நேபாளத்தில் அரசியல் குழப்பம் அமைச்சர்கள் திடீர் ராஜினாமா



காத்மாண்டு-நேபாளத்தில், பிரதமர் பிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரண மாக ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததால், அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

கூட்டணி அரசில்



நம் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி அரசில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியும் அங்கம் வகித்தது.

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்செனே துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

இதற்கிடையே, ரபி லாமிச்செனெ கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது தாக்கல் செய்த குடியுரிமை சான்றிதழ் போலியானது என, நேபாள உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து லாமிச்செனெ, தன் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் தன் உண்மையான குடியுரிமைச் சான்றிதழை மீண்டும் பெற்ற அவர், மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தும்படி, பிரதமர் பிரசண்டாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

ஆலோசனை



இதையடுத்து, ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி நிர்வாகிகள் நேற்று காத்மாண்டுவில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்த மூவரும் ராஜினாமா செய்வதாகவும், கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் லாமிச்செனே அறிவித்தார்.

ஆனாலும், பிரசண்டா அரசுக்கு வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்மாண்டு-நேபாளத்தில், பிரதமர் பிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரண மாக ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக

மூலக்கதை