உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு
திருப்பதி : புத்தூரில் உள்ள குருகுல பள்ளியில் ஆய்வு செய்த போது உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது. குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வெங்கடரமணா உத்தரவிட்டுள்ளார்.திருப்பதி மாவட்டம், நாயுடுபேட்டை அடுத்த புதூரில் உள்ள சமூக நல பெண்கள் குருகுல பள்ளியில் கலெக்டர் வெங்கடரமணா நேற்று மதியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணிகளின் தினசரி உணவு மெனுவை சரிபார்த்தார். பின்னர், மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினார்.தொடர்ந்து, அவர் பேசியதாவது: மெனுவின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டும். மாணவிகளின் உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது. பள்ளியின் தூய்மையை மேம்படுத்த வேண்டும். மாணவிகள் அனைவருக்கும் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும்.இதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டை, கடலைப்பருப்பு போன்ற கூடுதல் உணவுகளை மருத்துவ சுகாதார பணியாளர்கள் வழங்க வேண்டும். சில மாணவர்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து குருகுல பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
