அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை

வாஷிங்டன்: பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக  அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு ஆண்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் உருமாறிய கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். எனினும் கடந்த ஆகஸ்ட்டில் தகுதிவாய்ந்த 16 சதவீதம் பேர் மட்டுமே சமீபத்திய பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளனர். பூஸ்டர் டோசுக்கான ேதவை அதிகமாக இருந்தாலும் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையானது எதிர்காலத்தில் எளிமையான தடுப்பூசி அணுகுமுறையை முன்மொழிந்துள்ளது. இதன்படி மற்ற தடுப்பூசிகளை போலவே கொரோனா தொற்றுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

மூலக்கதை