தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு சீனாவில் மேலும் பல நகரங்களில் ஊரடங்கு: வெளியே செல்ல மக்களுக்கு தடை

தினகரன்  தினகரன்
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு சீனாவில் மேலும் பல நகரங்களில் ஊரடங்கு: வெளியே செல்ல மக்களுக்கு தடை

பீஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா தொற்றுக்கு 31,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதான், அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். கடந்த 6 மாதத்தில் கொரோனாவுக்கு 5,232 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நகரங்களில்  ஊரடங்கு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜென்ங்ஜோவில் 8 மாவட்டங்களில் பொதுமக்கள் உணவு அல்லது மருத்துவ சிகிச்சை தவிர வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தினசரி அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கிலும்  சர்வதேச ஆய்வு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் குடியிருப்புக்குள் நுழைவதும்  தடை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை