ஹாக்கி: இந்திய பெண்கள் போராடி தோல்வி

தினமலர்  தினமலர்
ஹாக்கி: இந்திய பெண்கள் போராடி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குர்ஜித் கவுர் (2வது நிமிடம்) ஒரு கோலடித்தார்.இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்தை (ஆக. 6) எதிர்கொள்கிறது. பைனலில் (ஆக. 6) அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



பிரதமர் வாழ்த்து


ஹாக்கி அணியினரை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: டோக்கியோ ஒலிம்பிக்கில், நமது ஹாக்கி அணியினர் வெளிப்படுத்திய திறன் என்றும் நினைவுகூரத்தக்கது. இன்று, போட்டி முழுவதும், நமது பெண்கள் ஹாக்கி அணியினர் விறுவிறுப்புடன் விளையாடியதுடன் தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். அடுத்த போட்டிக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.



மூலக்கதை