இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியர் படையெடுப்பால் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது உக்ரைன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியர் படையெடுப்பால் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது உக்ரைன்

கியேவ்; இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உக்ரைன் நாட்டுக்கு செல்வதால், அந்நாடு குழந்தை உற்பத்தி  செய்யும் தொழிற்சாலையாக மாறி வருகிறது. மேலும், வாடகைத்தாயாக அமர்த்தப்படும் பெண்களின் வாழ்க்கை முறை கேள்விக்குறியாகி வருகிறது.

பொதுவாக தாயாக இருப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் மகிழ்ச்சியான உணர்வு; ஆனால் இயற்கையில் கர்ப்பம் தரிக்க முடியாத அல்லது கர்ப்பப் பை பலவீனமாக இருக்கும் பெண்கள், வாடகைத் தாய் முறையை நாடுகிறார்கள். குழந்தைக்காக ஏங்கி பெற்றோராக விரும்பும் தம்பதிகள், கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யாவிற்கு அருகில் உள்ள அழகான உக்ரைன் நாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.   கிழக்கு ஐரோப்பா நாடுகளை போன்று வாடகை தாய் பெற்றுத் தருதல் உக்ரைனில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டில் வாடகை தாய்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.

ஆனால், உக்ரைன் பெண்கள் பலர், குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறி வருகின்றனர். வாடகைத்தாய்களை வைத்துக் கொண்டு சிலர் குழந்தைகளை பெற்றுத்தரும் தொழிலை நடத்தி வருகின்றனர்.

ஆனால், வாடகைத் தாயாக இருப்பவர்கள், தங்களை ஒரு தொழிலாளியாகதான் கருதமுடியுமே தவிர, அந்த குழந்தைக்கு எவ்வித உரிமையும் கோர முடியாது. மேலும் வாடகை தாயாக இருப்பவர்கள், இங்கு விலங்குகளைப் போல வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும்.



‘டெய்லி மெயில்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.   வாடகைத்தாய் தொழில் நடத்துபவர்கள், குழந்தைகளைப் பெற முடியாதவர்களிடம் இருந்து குழந்தையை பெற்றுத் தருவதற்காக ரூ. 40 முதல் ரூ. 42 லட்சம் வரை  வசூலிக்கிறார்கள்.

இதற்காக பல நாடுகளை சேர்ந்த தம்பதிகள், பல லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள். சில மாதங்கள் உக்ரைன் நாட்டிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுடன் சொந்த நாட்டிற்கு திரும்புகிறார்கள்.

இதற்காக, பல அங்கீகரிக்கப்பட்ட புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர். பணம் ஒருபக்கம் வந்தாலும், தொழில்முறை வாடகைத் தாயாக இருக்கும் பெண்களின் நிலைமை மிகவும் மோசமான சூழலில் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.   இதுகுறித்து வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளின் பெற்றோராக அங்கீகாரம் பெற்ற பியான்கா - வின்னி ஸ்மித் தம்பதியிடம், சம்பந்தப்பட்ட வாடகைத்தாய் கூறுகையில், ‘வாடிக்கையாளரிடமிருந்து சில லட்சம் ரூபாய் பெற்றாலும் கூட, அவர்கள் எங்களின் நிலைமையை உணரமாட்டார்கள்.

அவர்களுக்கு குழந்தை மட்டுமே தேவை என்பதால், தாயின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். ஒன்பது மாத போராட்டத்திற்குப் பிறகு, குழந்தை கிடைத்தவுடன் அவர்கள் அந்த குழந்தையை தங்களது உரிமை பொருளாக பார்க்கின்றனர்.   எங்களின் வலி (தாய்மை) அவர்களுக்கு தெரியாது.

பிரசவத்திற்கு முன்பு மிகவும் மோசமாக நடத்தப்படுகிறோம். எங்களின் நிலை விலங்குகளை காட்டிலும் குறைவானது என்று கூறிவிட முடியாது.



அழுக்கான இடங்களில் வாழ வேண்டும். இயற்கை உபாதை கழிப்பதற்காக இடங்கள், சுகாதாரமாக இருக்காது.

இதையெல்லாம் தட்டிக் கேட்க முடியாது. குழந்தை பெற்றுத் தரும் வேலைக்காக ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், வசதி என்ற பெயரில், வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்களிடமும் பொய் சொல்லி லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்’ என்று புலம்பினார்.   இந்தப் பெண்ணின் கூற்றுப்படி, பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு நடத்தியதில் உக்ரைனில் உள்ள பிற வணிக நிறுவனங்களைப் போலவே வாடகைத் தாய் தொழிலும் பெரிய அளவில் இயங்குகிறது. இதுபோன்ற தொழிலை பிரபல நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன.

சர்வதேச அளவில் பொருளீட்டும் தொழிலாக பார்க்கின்றனர். தாய்மை அடைய முடியாத தம்பதிக்கான வாய்ப்பாக வாடகைத்தாய் முறை அமலில் இருந்தாலும் கூட, இது தொழிலாக மாறிவிட்டதால் இந்த திரைக்குப் பின்னால் இருக்கும் இருண்ட உலகத்தை யாரும் அறிந்திருக்க வாய்பில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட வாடகைத்தாய்கள்.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெறுதல் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டவிதிமுறைகள் உள்ளன. அதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சில தம்பதியினர், உக்ரைன் போன்ற நாடுகளுக்கு குழந்தையை பெறுவதற்காக படையெடுக்கின்றனர்.

ஆனால், குழந்தையை பெற்றுத்தரும் வாடகைத்தாயின் நிலைமையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக உக்ரைன் நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை