உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பேட்டிங்

தினமலர்  தினமலர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பேட்டிங்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. முதல் சீசனுக்கான பைனலுக்கு கோஹ்லி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் வழிநடத்தும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பைனல் துவங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி துவங்கவில்லை.


இந்நிலையில், மழை நின்றதை தொடர்ந்து போட்டி இன்று துவங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மூலக்கதை