வவ்வால் உயிருடன் கூண்டில் அடைப்பு சீனா

தினமலர்  தினமலர்
வவ்வால் உயிருடன் கூண்டில் அடைப்பு சீனா

பீஜிங்:நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு, கூண்டில் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்பட்டது.குற்றச்சாட்டுஉலகெங்கும் பரவியுள்ள நிலையில், 'வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்' என, பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது இந்த வைரஸ். அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியதாக சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.சீனா நடத்தியுள்ள உயிரி ஆயுத தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. வூஹான் ஆய்வு கூடத்தில், சீனாவுடன் இணைந்து, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. அங்கிருந்து வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஆனால் வூஹான் ஆய்வு கூடத்துக்கு எதிராக தொடர்ந்து பல ஆதாரங்கள், தகவல்கள் வெளிவருகின்றன.சீர்குலைக்க திட்டம்இந்நிலையில், வூஹான் ஆய்வு கூடத்தில் கூண்டுக்குள் வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி உள்ளது. இந்த வவ்வால்களுக்கு அங்குள்ள விஞ்ஞானிகள், புழுவை உணவாக கொடுக்கும் காட்சியும் அதில் இடம் பெற்று உள்ளது.

உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, சீனா தான், திட்டமிட்டு கொரோனா வைரசை பரப்பியது என்ற, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த வீடியோ உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை