தென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா கண்டனம்

தினமலர்  தினமலர்
தென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா கண்டனம்

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனாவுடன் அமெரிக்க கப்பற்படை மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.

தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கப்பல் படை இந்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது சீன கப்பல் படையை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அடிக்கடி அமெரிக்கா சட்டவிரோதமாக ஆதரிப்பதாக சீன வெளியுறவுத்துறை பல காலமாக குற்றம்சாட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


போர் விமானங்களை தாங்கிச் செல்லும் யூஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்கிற போர்க்கப்பலை அமெரிக்கா தென் சீனக் கடலுக்கு அனுப்பி உள்ளது. இது வழக்கமான அமெரிக்க கப்பற்படை பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என்று அமெரிக்காவில் விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை