70 % பேருக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
70 % பேருக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

லண்டன்: அடுத்த ஆண்டிற்குள் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என ஜி7 நாடுகளின் தலைவர்களிடம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறி உள்ளார்.

ஜி-7 அமைப்பின் 47 வது மாநாடு பிரிட்டனில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவிட் தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதே நம்முன் உள்ள சவால் என ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் கூட்டம் நடக்கும் போது உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். இதற்கு 11 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும். இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

மூலக்கதை