தமிழகத்தில் பின்பற்றிய டிரோன் முறையை பின்பற்றும் சீனா..!

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் பின்பற்றிய டிரோன் முறையை பின்பற்றும் சீனா..!

குவாங்ஷோ: சீனாவின் குவாங்ஷோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று சோதனை செய்ய தமிழக அரசு கையாண்ட முறையை சீன அரசு தற்போது பயன்படுத்தி அந்த மாகாணத்தின் மக்களை சோதித்து வருகிறது.


இதற்காக அந்த சீன மாகாணத்திற்கு பிரத்தியேகமாக 60 டிரோன்கள் வந்து இறங்கியுள்ளன. இவற்றை அந்த மாகாண போலீசாரால் ரிமோட் கண்ட்ரோல் கொண்டு இயக்க முடியும்.
ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவோரை இந்த டிரோன்கள் மூலமாகப் படம் பிடிக்க முடியும். இந்த டிரோன்கள் அவ்வப்போது வானில் பறப்பதால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு பயந்து வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பர் என்று சீன அரசு கருதுகிறது. இதனை அடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மூலக்கதை