fast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது

தினகரன்  தினகரன்
fast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது

உலக புகழ்பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா சீனாவில் வண்ண மையமாக தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த விழா வரும் 20-ம் தேதி வரை பல்வேறு அரங்கங்களில் நடைபெற இருக்கிறது. 113 நாடுகளில் இருந்து வந்துள்ள 4,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஷாங்காய் விழாவில் திரையிடப்பட உள்ளன. உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் fast and furious. பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து இதுவரை 8 பகுதிகள் தயாரிக்கப்பட்டன. இந்த படத்தின் 8-வது பகுதிக்கு F9 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 பகுதிகளுக்கு பிறகு fast and furious திரைப்படத்தின் சீக்குவெல் தயாரிப்பை கைவிட Universal Pictures நிறுவனம் முடிவு செய்துள்ளதாக fast and furious நாயகன் Vin Diesel தெரிவித்துள்ளார்.

மூலக்கதை