பாகிஸ்தான் சிறையில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் விடுதலையாக வாய்ப்பு!!

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் சிறையில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் விடுதலையாக வாய்ப்பு!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சிறையில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவிற்கு நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை அந்நாட்டு நாடாளுமன்றம் வழங்கி உள்ளது. 51 வயதாகும் குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஒன்றான பலுச்சிஸ்தானில் வைத்து அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் புகார் ஆகும். ஆனால் இதை மறுத்து வரும் இந்தியா, குல்பூஷன் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் கடத்தி வந்து விட்டதாக குற்றச் சாட்டி வருகிறது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவ்விற்கு கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 2019ம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய இந்தியா அவரது தண்டனையை நிறைவேற்றுவதில் இருந்து தடை பெற்றது. தற்போது குல்பூஷன் ஜாதவ் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த சூழலில் 2019ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய மறு ஆய்வு மற்றும் மறு பரிசீலனை கட்டளையை ஒருவழியாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஏற்று மசோதா நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் குல்பூஷன் ஜாதவ் தனது தண்டனையை எதிர்த்து அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் முறைகேடு செய்ய முடியும். இதனால் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்க்க செய்துள்ளது.

மூலக்கதை