காசா மீது இஸ்ரேல் தொடர்குண்டு வீச்சு: ஏராளமான கட்டடங்கள் தரைமட்டம்

தினமலர்  தினமலர்
காசா மீது இஸ்ரேல் தொடர்குண்டு வீச்சு: ஏராளமான கட்டடங்கள் தரைமட்டம்

காசா : பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு வீச்சுக்கு தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின.

மேற்காசிய நாடான இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர், ஜெருசலேம் மீது ராக்கெட் குண்டுகளை வீசினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா மீது வான்வழியாக தொடர்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக வழக்கமாக குண்டு வீச்சுக்கு முன், குடியிருப்பு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின்பே இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். தற்போது எச்சரிக்கையின்றி தாக்குவதால், காசா நகர மக்கள் உயிர் பிழைக்க குடும்பத்துடன்இடம் பெயர்வதாக, காசா பகுதியைச் சேர்ந்த சதாலா தனானி என்பவர் வேதனையுடன் தெரிவித்தார்

மூலக்கதை