இந்தியா வாங்கும் மருந்துகளுக்கு அதிக விலை ஏன்: சீனா விளக்கம்

தினமலர்  தினமலர்
இந்தியா வாங்கும் மருந்துகளுக்கு அதிக விலை ஏன்: சீனா விளக்கம்

பீஜிங்: மூலப்பொருள் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் கொரோனா சிகிச்சைக்கான மருந்து, மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்துள்ளதாக தாக சீனா விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுங்யிங் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் அந்நாட்டின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யுமாறு சீன நிறுவனங்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் விலை உயர்வுக்கு, முக்கியமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் விலை உயர்வுக்கு அதன் மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளது காரணம்.

இந்தியாவின் தேவையை நிறைவு செய்ய மூலப்பொருள்களை சீனா இறக்குமதிதான் செய்கிறது. மிகக்குறைந்த காலகட்டத்தில் இந்தியாவில் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மூலப் பொருள்களின் அளிப்பு குறைவாகவே உள்ளது. இதனால் மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலையில் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை