நாசாவின் பேர்சேவேரன்ஸ் வெளியிட்ட வீடியோ வைரல்

தினமலர்  தினமலர்
நாசாவின் பேர்சேவேரன்ஸ் வெளியிட்ட வீடியோ வைரல்

வாஷிங்டன் டிசி: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் பேர்சேவேரன்ஸ் என்கிற ரோவர் முன்னதாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் தொலைநோக்கு திட்டத்தை தீட்டியுள்ளது நாசா. இதற்காக செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்த ரோவர் அனுப்பப்பட்டது.

இந்த ரோவரில் பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் காற்று இல்லாததால் ஒலிகள் ஏதாவது கேட்கின்றனவா என்று சோதனை செய்ய சிறிய ஒலிபெருக்கியை இந்த கேமராவுடன் பொருத்தி விஞ்ஞானிகள் அனுப்பினர். முன்னதாக பேர்சேவேரன்ஸ் ரோவர் கேமரா, செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களை நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.


இதனைத்தொடர்ந்து தற்போது செவ்வாய் கிரகத்தில் ஒரு சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு இதனை வீடியோ எடுத்து பேர்சேவேரன்ஸ் நாசாவுக்கு அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தின் தளத்தில் ஹெலிகாப்டர் பறக்க முடியுமா என்று இதன்மூலமாக நாசா விஞ்ஞானிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த ஹெலிகாப்டர் எழுப்பும் சத்தத்தை ஒலிபெருக்கி பதிவு செய்துள்ளது. இந்த தகவலை நாசா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மூலக்கதை