ஆஸ்திரேலிய பிரதமரின் 'வி சாட்' கணக்கு முடக்கம்

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலிய பிரதமரின் வி சாட் கணக்கு முடக்கம்

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனின், 'வி சாட்' கணக்கு முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால், சீன கம்யூனிஸ்ட் அரசு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், சீன செயலியான, 'வி சாட்' செயலியை பயன்படுத்தி வருகிறார். அவரை அந்த செயலி வாயிலாக 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்தனர்.இந்நிலையில் ஸ்காட் மாரிசனின் வி சாட் கணக்கிற்குள் விஷமிகள் சிலர் ஊடுருவி அதை முடக்கியுள்ளனர். அவரது கணக்கிற்கு, 'ஆஸ்திரேலிய சீன நியூ லைப்' என பெயர் மாற்றப்பட்டு, அதிலிருந்த அவரின் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து, அவரை பின்தொடர்ந்த 76 ஆயிரம் பேருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்காட் மாரிசனால், தன் கணக்கை உபயோகிக்க முடியாமல் போனது. இதற்கிடையே அவரது கணக்கை மீட்டுத் தர, வி சாட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

வரும் மே மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் தலையிடும் வகையில் பிரதமரின் வி சாட் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றும், இதில சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு தொடர்பு இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனின், 'வி சாட்' கணக்கு முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால், சீன கம்யூனிஸ்ட் அரசு இருப்பதாக குற்றம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை