இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: 13 பேர் பலி; 57 பேர் காயம்

தினமலர்  தினமலர்
இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: 13 பேர் பலி; 57 பேர் காயம்

லுமாஜாங்-இந்தோனேஷியாவில் 'செமேரு' எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருகிறது. இதில் சிக்கி, 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 57 பேர் காயமடைந்து உள்ளனர்.


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் செமேரு என்ற எரிமலை உள்ளது. 3,676 மீட்டர் உயரமான இந்த எரிமலை அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.10 ஆயிரம் மீட்டர்இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளியேறத் துவங்கியது. இதனால் எரிமலையில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாம்பல் பீறிட்டு வெளியேறி வருகிறது.

அந்த சாம்பல், எரிமலையை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் பரவத் துவங்கி உள்ளது. நிவாரண உதவிஅங்குள்ள கிராமங்கள் அனைத்திலும் ஒரு ஆள் உயரத்திற்கு சாம்பல் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீருடன் சாம்பல் சேர்ந்து, சகதியாக காட்சிஅளிக்கிறது.எரிமலையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள நதி இருக்கும் பகுதி வரை, எரிமலைக் குழம்பு வழிந்தோடுவதால் அதற்கு இடையே இருக்கும் அனைத்து இடங்களும் தீக்கு இரையாகின.

பாதுகாப்பு நடவடிக்கையாக எரிமலைக்கு 5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கவலைக்கிடம்இந்த எரிமலைக் குழம்பில் ஏற்பட்ட தீக்காயங்களால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 பேர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லுமாஜாங்-இந்தோனேஷியாவில் 'செமேரு' எரிமலையில் இருந்து எரிமலைக்குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருகிறது. இதில் சிக்கி, 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 57 பேர் காயமடைந்து

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை