இலங்கையில் 3 மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா: மூன்றாம் தரப்பால் ஆபத்து என கருத்து

தினகரன்  தினகரன்
இலங்கையில் 3 மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா: மூன்றாம் தரப்பால் ஆபத்து என கருத்து

கொழும்பு:இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல் முனையத்தை விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தை சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கியது. இதற்காக, இந்தியா, ஜப்பான் உடனான ஆழ்கடல் கப்பல் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. அதே போல, யாழ்ப்பாண கடலோரத்தில் உள்ள டெல்ப்ட், நாகதீபா, அனல்தீவு ஆகிய 3 தீவுகளில் புதிய மின் உற்பத்தி ஆலைகளை அமைக்க, சீனாவின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளித்தது.ஆனால், தற்போது இந்த 3 தீவுகளும் தமிழ்நாட்டிற்கு மிக அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி இலங்கையின் வட மாகாணத் தீவுகளில் அமைத்து வரும் மின் உற்பத்தி திட்டங்களை ரத்து செய்வதாக இந்த சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதற்கு பதிலாக, மாலத்தீவு நாட்டில் உள்ள 12 தீவுகளில் சோலார் மின்உற்பத்தி ஆலைகளை அமைக்க கடந்த 29ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. முன்னதாக, சீன நிறுவனத்துக்கு மின் உற்பத்தி ஆலைகள் அமைக்க அனுமதி அளித்ததற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை