மாணவர் சங்கத்தில் ஜாதி பிரிவு ஹார்வர்டு பல்கலையில் சேர்ப்பு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஜாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளுக்கு முடிவு கட்ட மாணவர் சங்க விதிமுறைகளில் ஜாதிப் பிரிவை சேர்த்துள்ளது.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலை உள்ளது. இங்குள்ள தெற்காசிய மாணவர் சங்கம் மாணவர்களின் பாதுகாப்பு பிரிவில் ஜாதியை சேர்க்கக் கோரி பல்கலை நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தது.அதையேற்று ஜாதியின் பெயரால் மாணவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு முடிவு கட்டவும் சமத்துவ மாணவ சமுதாயத்தை உருவாக்கவும் மாணவர் சங்க விதிமுறைகளில் ஜாதியை சேர்ப்பதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய பாரம்பரியமிக்க கல்வி மையங்களில் முதன் முறையாக ஹார்வர்டு பல்கலை இந்த முடிவை எடுத்துள்ளது.இது குறித்து 'ஈக்யுட்டி லேப்ஸ்' எனும் தலித் அமைப்பின் நிறுவனர் தேன்மொழி சவுந்தரராஜன் கூறியதாவது:
ஜாதியின் பெயரால் ஏராளமான மாணவர்கள் தொழிலாளர்கள் சமூக மக்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். அவர்களை பாதுகாத்து ஜாதி சமயமற்ற உலகை ஏற்படுத்த தேசிய அளவில் மிகப் பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதில் ஒன்றாக ஜாதிய பாகுபாட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதன் வாயிலாக ஹார்வர்டு பல்லை மாணவர் சங்கங்களில் ஜாதிய பாகுபாடு மறைந்து சமத்துவம் மலரும். இவ்வாறு அவர் கூறினார்.

வாஷிங்டன்:அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஜாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளுக்கு முடிவு கட்ட மாணவர் சங்க விதிமுறைகளில் ஜாதிப் பிரிவை சேர்த்துள்ளது.அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை