'இன்டர்போல்' தலைவராக சர்ச்சைக்குரிய அதிகாரி தேர்வு

தினமலர்  தினமலர்
இன்டர்போல் தலைவராக சர்ச்சைக்குரிய அதிகாரி தேர்வு

இஸ்தான்புல்:'இன்டர்போல்' அமைப்பின் தலைவராக ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மூத்த போலீஸ் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 'இன்டர்போல்' எனப்படும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.இந்த அமைப்பின் தலை வராக உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் யாங்கின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது நடந்தது. அதனுடன், துணைத் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக ஐக்கிய அரபு எமிரேட்சின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஐ.ஜி., மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல்ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அகமது நசீர் அல்ரைசி மீது மனித உரிமைகள் குழுக்கள் ஏற்கனவே பல புகார்களை சுமத்தி உள்ளன.

இந்நிலையில் தற்போது இன்டர்போல் அமைப்பின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிக்க உள்ளார்.இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் அமெரிக்காவுக்கான துணைத் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த வால்டேசி உர்குவிஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்காவுக்கான துணைத் தலைவராக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கார்பா பாபா உமர் தேர்வாகி உள்ளார்.இன்டர்போல் அமைப்பின் நிர்வாக குழுவுக்கான ஆசிய பிரதிநிதியாக, நம் நாட்டின் சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பிரவீன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்தான்புல்:'இன்டர்போல்' அமைப்பின் தலைவராக ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மூத்த போலீஸ் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேற்காசிய நாடான துருக்கியின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை