ஊரடங்கு தனிமையில் தவித்த பெண்கள் பற்றிய கன்னட படம்

வளர்ந்து வரும் கன்னட நடிகை பாவனா கவுடா. தற்போது கன்டிகா, கவுலி, மெஹபூபா, மைசூரு டைரிஸ், பைட்டர், தூதுமதிகே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன். இந்த படம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டுத் தனிமையில் மாட்டிக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் பிரச்னைகளை பேசுகிறது. பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. படிகர் தேவேந்திரா இயக்குகிறார். பரத் நாயக் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி பாவனா கூறியதாவது : அனைவரின் வாழ்க்கையிலும் லாக்டவுன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரில் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் தனது கனவுகளைத் துரத்துவதையும், இரண்டு மாத லாக்டவுனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் காட்டும் படம் இது. இது லாக்டவுனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் போன ஒவ்வொரு பெண்ணின் வலியையும் பிரதிபலிக்கும். என்கிறார்.
மூலக்கதை
