தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.5-ஆக பதிவு

தினகரன்  தினகரன்
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.5ஆக பதிவு

தைபே நகரம்: தைவானின் வடகிழக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தைவானில் வடகிழக்கு யிலான் மாவட்டத்தை பிற்பகல் 1:11 மணிக்கு (0511 GMT) 42 மைல் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில்; நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானில் கடந்த 2018 -ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை