'வடக்கு-தெற்கு வழித் தடத்துடன் சபஹர் துறைமுகம் சேர வேண்டும்'

தினமலர்  தினமலர்
வடக்குதெற்கு வழித் தடத்துடன் சபஹர் துறைமுகம் சேர வேண்டும்


யெரவன் : '' சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தடத்தில், சபஹர் துறைமுகத்தை இணைக்க வேண்டும்,'' என, வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்ற ஜெய்சங்கர், இறுதியாக ஆர்மேனியா சென்று, வெளியுறவுத் துறை அமைச்சர் மிர்சோயனை சந்தித்து பேசினார்.இதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து தடத் திட்டத்தில் இந்தியாவும், ஆர்மேனியாவும் இணைந்துள்ளன. இத்திட்டத்தில் ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தையும் இணைப்பது குறித்து இருவரும் பேசினோம். இதனால், பிராந்தியங்களின் இணைப்பு வலுப்பெறும். ஆர்மேனியாவில், இந்தியாவைச் சேர்ந்த, 3,000க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்கின்றனர்.

கொரோனா காலத்தில், இந்தியர்களுக்கு குறிப்பாக மாணவர்களின் நலனுக்கு ஆர்மேனிய அரசு செய்த ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தேன். இந்தியா, ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இடம் பெற, ஆர்மேனியா ஆதரவு அளித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய கிழக்கு நாடான ஈரானில், சபஹர் துறைமுகத்தை இந்தியா அமைத்து தந்துள்ளது. இதில், 2017ல் போக்குவரத்து துவங்கியது. இதனால், இந்திய சரக்கு கப்பல்கள், பாக்., கடற்பகுதியில் செல்லாமல், ஆப்கன் வழியாக ஈரான் செல்வது சாத்தியமாகியுள்ளது.

யெரவன் : '' சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தடத்தில், சபஹர் துறைமுகத்தை இணைக்க வேண்டும்,'' என, வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.நான்கு நாள் அரசு முறைப்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை