செயற்கைகோள் புகைப்படங்களால் அதிர்ச்சி யுரேனியம் செறிவு ஆலையை விரிவுபடுத்தும் வடகொரியா

தினகரன்  தினகரன்
செயற்கைகோள் புகைப்படங்களால் அதிர்ச்சி யுரேனியம் செறிவு ஆலையை விரிவுபடுத்தும் வடகொரியா

சியோல், செப்.19: வடகொரியா தனது அணுசக்தி வளாகத்தில் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை விரிவுபடுத்தி வெடிகுண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியா கடந்த 6 மாதங்களுக்குந் பிறகு சமீபத்தில் அதிநவீன ஏவுகணைகளை வீசி சோதனைகளை மேற்கொண்டது. இதையடுத்து, தென்கொரியாவும் போட்டி போட்டுக் கொண்டு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்நிலையில், மாக்சர் என்ற செயற்கைகோள் நிறுவனம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில்,  வடகொரியாவில் உள்ள யோங்பியோனில் யுரேனியம் செறிவூட்டல் ஆலை கட்டுமானப் பணிகள் நடப்பதை அது காட்டியது. மரங்கள் அகற்றப்பட்டு, நிலம் தோண்டப்பட்டுள்ளது. எனவே, யுரேனியம் செறிவூட்டல் ஆலையை வடகொரியா விரிவுபடுத்தி, அணு வெடிகுண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

மூலக்கதை