'ட்ரோன்' தாக்குதல் அமெரிக்கா வருத்தம்

தினமலர்  தினமலர்
ட்ரோன் தாக்குதல் அமெரிக்கா வருத்தம்

வாஷிங்டன்:'ஆப்கனில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அப்பாவிகள் 10 பேர் உயிரைப் பறித்தது தவறு தான்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர் உட்பட 183 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து காபூல் விமான நிலையம் நோக்கி வந்த ஒரு வாகனம் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஏழு சிறுவர்கள் உட்பட 10 பேர் பலியாயினர்.இது குறித்து அமெரிக்க மத்திய படை தளபதி பிராங்க் மெக்கென்சி கூறியதாவது:காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த உள்ளதாக 60க்கு மேற்பட்ட பகுதிகளில் இருந்து எங்களுக்கு உளவுத் தகவல்கள் வந்தன.வெள்ளை நிற காரில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 36 மணி நேரம் ஆலோசனை நடத்தினோம். விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது.இறுதியாக கிடைத்த தகவல்களை பல முனைகளில் ஊர்ஜிதப்படுத்திய பிறகே, அந்த வாகனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தினோம். அதன் பின்தான் வாகனத்தில் வந்தவர்கள் அப்பாவிகள் என, தெரிய வந்தது. தாக்குதல் நடத்தியது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

வாஷிங்டன்:'ஆப்கனில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அப்பாவிகள் 10 பேர் உயிரைப் பறித்தது தவறு தான்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை