சிங்கப்பூர் சென்று திரும்பியவரால் சீனாவுக்கு சிக்கல்: கோவிட் பரவலால் ஊரடங்கு அமல்

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் சென்று திரும்பியவரால் சீனாவுக்கு சிக்கல்: கோவிட் பரவலால் ஊரடங்கு அமல்

பீஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய பெருந்தொற்று, கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வருகிறது.

சீனா முழுவதும் கோவிட் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீன அரசு கூறி வந்தது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்தை சீனா தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜியாங்கு, செச்சுவான், லியானிங், ஹுனான், ஹுபெய் உட்பட 18 மாகாணங்களில் கோவிட் வைரஸ் மீண்டும் பரவியது. இதையடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனில் கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:

புஜியன் மாகாணத்தின் புட்டியன் நகரில் 32 லட்சம் பேர் வசிக்கின்றனர். அந்த நகரை சேர்ந்த ஒருவர் அண்மையில் சிங்கப்பூருக்கு சென்று திரும்பினார். அவருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது 12 வயது மகன் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார். அந்த மாணவர் மூலம் 36 மாணவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. இதைத் தொடர்ந்து புட்டியன் நகரில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல புஜியன் மாகாணத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமான ஜியாமென் நகரில் நேற்று 56 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்த நகரில் 45 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பீஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய பெருந்தொற்று, கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை