'புதினின் நாய்க்குட்டியாக மாறிவிட்டார் டிரம்ப்:' ஜோ பிடன் விமர்சனம்

தினமலர்  தினமலர்
புதினின் நாய்க்குட்டியாக மாறிவிட்டார் டிரம்ப்: ஜோ பிடன் விமர்சனம்

வாஷிங்டன்: 'ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போன்று டிரம்ப் செயல்படுகிறார்' என, ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.


ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை. அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்துச் சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.


அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படத் தவறிவிட்டார். ரஷ்ய அதிபர் புதினின் நாய்க்குட்டி போல் டிரம்ப் செயல்படுகிறார். நாங்கள் புதினுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். நாங்கள் டிரம்ப் போல செயல்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மூலக்கதை