பாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்

தினமலர்  தினமலர்
பாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறை தண்டனை பெற்று நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சைக்காக லண்டன் சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் அவர் 'ஆன்லைன்' வழியாக பங்கேற்க உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த பாக். முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் 70 இரு வழக்குகளில் பெற்ற தண்டனையால் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஆண்டு நவ. மாதம் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.சிகிச்சை தொடர்வதால் அவர் நாடு திரும்ப முடியாமல் போனதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதற்கிடையே பாக்.கில் இம்ரான் கான் தலைமையிலான அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இவர்கள் தரப்பிலான கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது தொடர்பாக அவருடன் பாக். மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தொலைபேசியில் பேசியுள்ளார்.

பிலாவல் பூட்டோ வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் 'இம்ரான் கான் தலைமையிலான அரசு வறுமைக்கு தீர்வு காண வில்லை.இதனால் அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளேன்' என கூறியுள்ளார்.

'இக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் ஆன்லைன் வழியாக பங்கேற்று பேசுவார்' என அவரது கட்சி நிர்வாகி முசாடிக் மாலிக் சமா 'டிவி' பேட்டியில் கூறியுள்ளார்.இதையடுத்து நவாஸ் ஷெரீப் பாக். அரசியலில் ஓராண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் பங்கேற்க உள்ளது தெரியவருகிறது.

மூலக்கதை