மொபைல் போனில் ஆபாச படம்: தாய்லாந்து எம்.பி., சேட்டை

தினமலர்  தினமலர்
மொபைல் போனில் ஆபாச படம்: தாய்லாந்து எம்.பி., சேட்டை

பாங்காக்: தாய்லாந்து பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எம்.பி.ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாசபடம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. .
நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை படித்தார். அப்போது, ராணுவ ஆதரவு கொள்கை உடைய கட்சியின் எம்.பி. ரொன்னதேப் அனுவாட் என்ற எம்.பி., பட்ஜெட் உரையை பொருட்படுத்தாமல், தன் மொபைல் போனில் பெண்களின் ஆபாசப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
இது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பார்லிமென்டில் ஆபாச படம் பார்த்த எம்.பி., ராஜினாமா செய்ய வேண்டும்' என, பலரும் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.


இது குறித்து, ரொன்னதேப் அனுவாட், கூறுகையில், ஒரு பெண், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உதவிட கோரியும் மொபைல் போனில் எனக்கு புகைபடத்தை அனுப்பியிருந்தார்.
அவர் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கியுள்ளரா அல்லது பணம் பறிப்பதற்கான நடவடிக்கையா என அறிந்து கொள்வதற்காக, அந்த புகைப்படத்தை பார்த்தேன். அது, ஆபாச படம் என்பது பின்னர் தான் தெரிந்தது. அந்த புகைப்படத்தை மொபைல் போனிலிருந்து உடனே அழித்து விட்டேன் என நீண்ட விளக்கம் அளித்தார்.

பார்லி. சபாநாயகர் சுவான் லீக்பேய் கூறியதாவது:
மொபைல் போனில் புகைப்படம் பார்த்தது, அந்த, எம்.பி.,யின் தனிப்பட்ட விவகாரம். போனில் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்க வேண்டும் என, பார்லிமென்ட் விதிகள் எதுவும் இல்லை. வேறு எந்த, எம்.பி.,யும் இது குறித்து புகார் அளிக்கவும் இல்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை