இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை: வங்கதேசம் வருத்தம்

தினமலர்  தினமலர்
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை: வங்கதேசம் வருத்தம்

தாகா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து வங்கதேசம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தகவலை முன்னரே தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


வங்கதேசத்தின் மாதாந்திர வெங்காய தேவை 2 லட்சம் டன்னாக உள்ளது. தற்போது அதன் கையிருப்பு 5.6 லட்சம் டன்னாக இருக்கிறது. 11,000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் அது உள்ளது. இதனிடையே வங்கதேசம் வெங்காயத்திற்கான தேவைக்காக துருக்கி நாட்டின் உதவியை நாடியுள்ளது.

மூலக்கதை