நேபாளத்தில் செப்.,21 முதல் உள்நாட்டு விமானசேவை தொடங்க திட்டம்

தினமலர்  தினமலர்
நேபாளத்தில் செப்.,21 முதல் உள்நாட்டு விமானசேவை தொடங்க திட்டம்

காத்மண்டு : நேபாளத்தில் செப்.,21 முதல் உள்நாட்டு விமான சேவைகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நேபாளத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக விமானம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது நேபாளத்தில் உள்நாட்டு போக்குவரத்து சேவைகளை தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து அந்நாட்டின் சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் கூறுகையில், நேபாளத்தில் செப்.,21 முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதனையொட்டி, மாவட்டங்களிலும் விமான சேவைகள் படிப்படியாக தொடங்கும். நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 1,170 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை சுமார் 55,329 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

மூலக்கதை