துபாயில் KCN901 என்ற நவீன தெர்மல் ஸ்கேனிங் ஹெல்மெட் மூலம் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய வசதி

தினகரன்  தினகரன்
துபாயில் KCN901 என்ற நவீன தெர்மல் ஸ்கேனிங் ஹெல்மெட் மூலம் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய வசதி

துபாய்: துபாய் சிலிகன் ஓயசிஸ் பகுதியில் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய பாதுகாப்பு ஊழியர்கள் ஸ்மார்ட் ஹெல்மெட்டை பயன்படுத்தி வருகின்றனர். துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய KCN90’ என்ற நவீன தெர்மல் ஸ்கேனிங் ஹெல்மெட்டை பாதுகாப்பு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. இந்த ஹெல்மெட்டின் உதவியால் துபாய் சிலிகன் ஓயசிஸ் பகுதியில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. அந்த ஹெல்மெட்டின் திரையில் மனித உடல் வெப்பநிலை INFRARED எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் உதவியுடன் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு உடல் வெப்பநிலை அதிகமாக காணப்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு ஊழியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நவீன முறையிலான ஹெல்மெட் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் தொலைவில் இருந்தாலும் துல்லியமாக மனிதரின் உடல் வெப்பநிலை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உதவியாக இருக்கிறது என துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையத்தின் துணைத் தலைவர் முஅம்மர் அல் கதீரி கூறினார்.

மூலக்கதை