இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்

தினமலர்  தினமலர்
இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டிற்கு இன்று (ஆக.5) நடக்கிறது.

அண்டை நாடான இலங்கைக்கு கடந்த, 2015ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு செப்., 1ல் அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பார்லிமென்டை திடீரென கலைத்து உத்தரவிட்டார். இதற்கான அரசாணையில், கையெழுத்திட்டார். இந்த அரசாணை, அமைச்சரவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையில், ஏப்ரல்,25ல் பார்லிமென்ட் தேர்தல்நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப் பட்டது. ஆனால், கொரோனா தொற்று குறையாதநிலையில், பின்னர் ஆக. 5 -ம் தேதிக்கு நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பார்லி.க்கு இன்று தேர்தல் நடக்கிறது. 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்திற்கு 7,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராஜபக்சே சகோதாரர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மும்முனை போட்டி நிலவுகிறது.இன்று காலை 7 மணிக்குஓட்டுப்பதிவு நடக்கிறது. நாளை (ஆக.6) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

மூலக்கதை