பஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

தினமலர்  தினமலர்
பஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

பனாமா : பஹ்ரைனில் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் வேண்டுமென்றே மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனாவை பரப்ப முயன்றதால் அவருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.


பஹ்ரைனில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது. தொற்று பாதிப்புகளை குறைக்க பஹ்ரைன் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே கழற்றிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியதால் அவருக்கு விதிமீறலின் அடிப்படையில் அபராதத்துடன் (BD 1,000) 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சுகாதாரதுறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தொற்று பரிசோதிக்கப்பட்ட பிறகு, தனது முக கவசத்தை (மாஸ்க்) வேண்டுமென்றே கழற்றி விட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியுள்ளார், பின் தன் கைகளில் மூச்சு திணறலை உள்ளிழுத்து, விரைவாக தொற்றை பரப்புவதற்காக மருத்துவர்களை தொட்டார். இது போன்ற விதிமீறல் / குற்ற செயல்களுக்காக தண்டனையை கீழ் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தது.

மூலக்கதை