சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு: பூசாரி கைது

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் நகை திருட்டு: பூசாரி கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்த நகைகள், பூசாரி கட்டுப்பாட்டில் இருந்து. நகைகள் குறித்த ஆய்வு பணி நடந்த போது, சிலை காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையின் போது, இந்த நகைகள் அணிவிக்கப்படும். அதற்காக கோயிலின் உள் பிரகாரத்தில் இருக்கும். வழக்கமாக நடத்தப்படும் ஆய்வின் போது, நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, பூசாரியிடம் விசாரணை நடந்தது. அப்போது, காணாமல் போன் நகை அவரிடம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை.


இது தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 36 வயது மதிக்கத்தக்க பூசாரியை, பணியில் இருந்த நம்பிக்கையை தகர்த்த பிரிவில் கைது செய்து பெயிலில் வெளியிட்டனர்.இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை