அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடேன் அதிகாரப்பூர்வ தேர்வு

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடேன் அதிகாரப்பூர்வ தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடேன் முறைப்படி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் வரும்  நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சியின் தற்போதைய அதிபர் டிரம்ப்பை  எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாண தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடேன் நேற்று முறைப்படி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாபஸ் பெற்றனர்.  ஆனாலும், அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி, கட்சியில் 1,991 பிரதிநிதிகள் ஓட்டளிக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை பிடேன் தற்போதுதான் பெற்றுள்ளார். அவருக்கு 1,993 பிரதிநிதிகள் ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வாகி இருக்கிறார். இவர், டிரம்ப்புக்கு எதிராக களமிறங்க உள்ளார்.ஜெர்மனியில் இருந்து படைகள் வாபஸ்இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா தனது படையை நிலைநிறுத்தி உள்ளது. அங்கு சுமார் 34,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். ஜெர்மனியில் மட்டும் 25,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜெர்மனியில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை