தாலிபானுக்கு இந்தியா ஆதரவு; குற்றஞ்சாட்டும் பாக்.,

தினமலர்  தினமலர்
தாலிபானுக்கு இந்தியா ஆதரவு; குற்றஞ்சாட்டும் பாக்.,

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தனில் இயங்கும் சன்னி இஸ்லாம் அடிப்படைவாதிகள் அரசியல் மற்றும் பயங்கரவாத அமைப்பு தாலிபான். 2016ம் ஆண்டு முதல் ஹிபதுல்லா அகுன்சாதா இதன் தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார்.

இஸ்லாமிய பள்ளிகளில் பயின்ற மாணவர்களால் (தலிப்கள்) உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்த பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் தாலிபான் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு புராதன சின்னங்களைத் தகர்த்தல், பொது இடங்களில் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவில் செப்.,11 டுவின் டவர் தாகுதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டது. தாலிபான்கள் ஆப்கனில் தங்கள் ஆட்சியையும் சட்டத்தையும் நிறுவ பாகிஸ்தனின் பகை நாடான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறது. இந்தியா தாலிபான்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.


அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியா தாலிபான்களுடன் இணக்கமாகச் செயல்படுவது அமைதிக்கு வழிவகுக்கும் என்றார் அதில் பாகிஸ்தானுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

கடந்த செவ்வாய் அன்று காபுல் மருத்துவனையில் தாலிபான்கள் நடத்திய தாகுதலில் 2 குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்கனில் உள்ள கல்லறையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். இது அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. தாலிபான்களது தாக்குதல்களுக்கு அமெரிக்கா பாகிஸ்தனை குற்றஞ்சாட்டியது.

இதனையடுத்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி தாலிபான்கள் மீதான தாக்குதலை குறைக்க ஆப்கன் ராணுவத்துக்கு உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து கொரோனா காலத்தில் ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆக்கிரமித்த பகுதிகளில் மருத்துவ உதவி செய்ய தாலிபான் ஏற்றுக்கொண்டது. பல தொண்டு நிறுவனங்களும் தாலிபான்களுக்கு உதவின. பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விலக ஆப்கனிஸ்தான், இந்தியாவிடம் எப்போது நட்பு பாராட்டியே வந்துள்ளது.

இந்நிலையில் தாலிபானை ஆதரிப்பதன் மூலமாக பாகிஸ்தானை கட்டுக்குள் வைக்க இந்தியா முயல்கிறது என பாக்., ராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மூலக்கதை