கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது

தினமலர்  தினமலர்
கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது

மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.



இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பலியான சம்பவத்தில் மினியாபொலிஸ் நகரத்தைச் சேர்ந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்தை இடது முட்டியால் நெருக்கினார். அதனை சக போலீசார் மூன்று பேர் வேடிக்கை பார்த்தனர்.
இதையடுத்து நான்கு போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நான்கு போலீசாருக்கும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

மூலக்கதை